முக்கிய பிரச்சினையை எழுப்ப அனுமதி மறுப்பு: மக்களவையில் காங்கிரஸ் வெளிநடப்பு
முக்கிய பிரச்சினையை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால், மக்களவையில் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுந்து, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து ஒரு முக்கிய பிரச்சினை குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி தனது துறை மானியக் கோரிக்கை பற்றி பேசத் தொடங்கிவிட்டார் என்று கூறி அனுமதி மறுத்தார்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுந்து தொடர்ந்து பேசினாலும் அவர் என்ன கூறினார் என்பது யாருக்கும் கேட்கவில்லை. இதனால் பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் அவைக்கு திரும்பினார்கள்.

Related Tags :
Next Story