காஷ்மீர் விவகாரம்: காங்கிரசை விட பாஜகவைத் தான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கிப் பேசியிருக்கிறேன்-வைகோ


காஷ்மீர் விவகாரம்: காங்கிரசை விட பாஜகவைத் தான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கிப் பேசியிருக்கிறேன்-வைகோ
x
தினத்தந்தி 10 Aug 2019 12:11 PM GMT (Updated: 10 Aug 2019 12:11 PM GMT)

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை விட பாஜகவைத் தான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கிப் பேசியிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். தனது பேச்சின் போது காங்கிரசை கடுமையாக தாக்கிப் பேசியதாக விமர்சனம் எழுந்தது.

வைகோவின்  பேச்சு காங்கிரஸ் கட்சியினரால் பெரும் விமர்சனத்திற்க்கு உள்ளானது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வைகோவை குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “காஷ்மீர் விவகாரத்தில் வாஜ்பாயின் கனவை நிறைவேற்றியதாக மோடி நினைப்பது தவறு. பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என காஷ்மீர் மக்களுக்கு நேரு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை விட பாஜகவைத் தான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கி பேசியிருக்கிறேன்.” என்றார்.

Next Story