மனித உரிமை கோர்ட்டு விவகாரம்: 7 மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


மனித உரிமை கோர்ட்டு விவகாரம்: 7 மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 13 Aug 2019 8:45 PM GMT (Updated: 13 Aug 2019 8:28 PM GMT)

மனித உரிமை கோர்ட்டு விவகாரம் தொடர்பாக, 7 மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

மனித உரிமை கோர்ட்டுகள் அமைப்பது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் பதில் அளிக்குமாறு கடந்த ஆண்டு ஜனவரி 4-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், 7 மாநிலங்கள், எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரம், நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்யாததுடன், வக்கீலும் ஆஜராகாததால், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பதில்மனு தாக்கல் செய்யாத தெலுங்கானா, உத்தரபிரதேசம், ஒடிசா, மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story