ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. காவல் நீட்டிப்பு - டெல்லி கோர்ட்டு உத்தரவு
ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அவரை சிறையில் அடைக்கவேண்டும் என்று சி.பி.ஐ. விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து கடந்த 21-ந் தேதி இரவு அவரை சி.பி.ஐ. கைது செய்தது.
தனிக்கோர்ட்டு அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். பின்னர் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் 30-ந் தேதி வரையும், அடுத்து செப்டம்பர் 2-ந் தேதி வரை யும் நீட்டித்து தனிக்கோர்ட்டு நீதிபதி அஜய்குமார் குஹார் உத்தரவிட்டார்.
இதற்கிடையே ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த மனுவை 3-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும், அதுவரை சி.பி.ஐ. காவலை ஒரு நாள் நீட்டித்து தனிக்கோர்ட்டில் அனுமதி பெறவும் நீதி பதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ். போபண்ணா அமர்வு உத்தரவிட்டது.
அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இந்த மனு மீதான விசாரணை தொடங்கியதும் நீதிபதி ஆர்.பானுமதி, அமலாக்கப்பிரிவு வழக்கில் முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவின் மீது 5-ந் தேதி (நாளை) உத்தரவு பிறப்பிக்க இருப்பதாகவும், அந்த மனுவுடன் இதனையும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், மனுதாரருக்கு வழங்கப்பட்ட சி.பி.ஐ. காவல் 5-ந் தேதியுடன் முடிவடைகிறது என்பதால் அதற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று வாதிட்டார். மேலும் தனிக்கோர்ட்டில் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவின் மீது அழுத்தம் தரப்போவதில்லை என்று தெரிவித்தார்.
இதற்கு சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இனி ப.சிதம்பரத்தை தங்கள் காவலில் வைக்க தேவை எதுவும் இல்லை என்றும், சட்டம் தன்னுடைய பணியை செய்யலாம் என்றும், அவரை நீதிமன்ற காவலில் (சிறையில்) வைக்கலாம் என்றும் தெரிவித்தார்.
ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வக்கீல் அபிஷேக் மனுசிங்வி, ஏற்கனவே இருந்த நிலை தொடரும் வகையில் அவருடைய காவலை 5-ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையை 5-ந் தேதிக்கு எடுத்துக்கொள்வதாகவும், அதுவரை ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை நீட்டித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.
தொடர்ந்து ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததால் நேற்று அவர் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை தொடங்கியதும் சி.பி.ஐ. தரப்பில், 5-ந் தேதி இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதால் 2 நாட்களுக்கு ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. காவலை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ப.சிதம்பரம் தரப்பில் இடைக்கால ஜாமீன் மனு மீது அழுத்தம் தரப்போவது இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே தெரிவித்து இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி அஜய்குமார் குஹார், ‘சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு குறித்து சொலிசிட்டர் ஜெனரல் கோர்ட்டுக்கு தெரிவித்து உள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 5-ந் தேதி வரை காவல் நீட்டிக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு முடிவெடுக்கும் வரை அவரை சிறைக்கு அனுப்பக்கூடாது. அவரை 5-ந் தேதி (நாளை) கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தார்.

Related Tags :
Next Story