சத்தீஸ்கர்: பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 நக்சலைட்கள் சுட்டுக் கொலை


சத்தீஸ்கர்: பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 நக்சலைட்கள் சுட்டுக் கொலை
x
தினத்தந்தி 14 Sept 2019 11:28 PM IST (Updated: 14 Sept 2019 11:28 PM IST)
t-max-icont-min-icon

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுக்மா,

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள தட்மேட்லா காட்டுப் பகுதியில் நக்சலைட்கள் சிலர் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் இன்று காலை முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினர். அவர்கள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். அந்த சம்பவத்தில் 3 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட நக்சலைட்களின் சடலங்கள் மற்றும் அங்கிருந்து துப்பாக்கிகளும் மீட்கப்பட்டதாகவும், தொடர்ந்து அந்தப் பகுதியில் தீவிர சோதனை நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார்.


Next Story