செல்போனுக்காக பேராசிரியரை கொன்ற மாணவர்
செல்போனுக்காக மாணவர் ஒருவர் பேராசிரியரை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பல்பூர்,
ஒடிசா மாநிலம் பர்மன்பூரில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் அருதானந்த பிரதான் (வயது 47). எல்.ஐ.சி. ஏஜெண்டாகவும் இருந்தார். அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். ஆசிரியர் தினமான கடந்த 5-ந்தேதி தனது வீட்டில் அருதானந்த பிரதான் மர்மமாக இறந்து கிடந்தார்.
அப்போது அவரது செல்போன் மாயமாகி இருந்தது. நவீன தொழில்நுட்பம் மூலமாக சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தபோது, மாயமான விலை உயர்ந்த செல்போனை புதிய சிம்கார்டு மூலம் அதே கல்லூரி மாணவர் ராஜூ (20) என்பவர் பயன்படுத்துவது தெரியவந்தது.
விசாரணையில், ராஜூ பேராசிரியர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். பேராசிரியர் வைத்திருந்த செல்போனை திருடுவதற்காக அவரை அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மாணவரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story