அமலாக்க துறை காவல்; ப. சிதம்பரத்திற்கு வீட்டு உணவு, மேற்கத்திய கழிவறைக்கு நீதிமன்றம் அனுமதி


அமலாக்க துறை காவல்; ப. சிதம்பரத்திற்கு வீட்டு உணவு, மேற்கத்திய கழிவறைக்கு நீதிமன்றம் அனுமதி
x
தினத்தந்தி 17 Oct 2019 1:39 PM GMT (Updated: 17 Oct 2019 1:39 PM GMT)

அமலாக்க துறை காவலில் உள்ள ப. சிதம்பரத்திற்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, மேற்கத்திய கழிவறை உள்ளிட்ட வசதிகளுக்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

அமலாக்க துறை பதிவு செய்த ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப. சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் ப. சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள 14 நாட்கள் அனுமதி வழங்கும்படி டெல்லி நீதிமன்றத்திடம் அமலாக்க துறை அனுமதி கோரியிருந்தது.

இதன்மீது இன்று நடந்த விசாரணையில், அக்டோபர் 24ந்தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி அஜய் குமார் அமலாக்க துறைக்கு அனுமதி வழங்கினார்.

அமலாக்க துறை காவலில் உள்ள ப. சிதம்பரத்திற்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, மேற்கத்திய கழிவறை மற்றும் மருந்துகள் வழங்குவது உள்ளிட்ட வசதிகளுக்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ. கோரிக்கையின் பேரில் ப. சிதம்பரத்திற்கு அக்டோபர் 24ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு வழங்கியும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story