சத்தீஷ்காரில் ஆயுதங்களை ஒப்படைத்து 28 நக்சலைட்டுகள் சரண்


சத்தீஷ்காரில் ஆயுதங்களை ஒப்படைத்து 28 நக்சலைட்டுகள் சரண்
x
தினத்தந்தி 21 Oct 2019 1:50 AM IST (Updated: 21 Oct 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

சத்தீஷ்காரில் ஆயுதங்களை ஒப்படைத்து 28 நக்சலைட்டுகள் சரணடைந்தனர்.

தண்டேவாடா,

சத்தீஷ்கார் மாநிலம், நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலம் ஆகும். அங்கு நக்சலைட்டுகளை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் அங்குள்ள தண்டேவாடா மாவட்டத்தில் நேற்று 28 நக்சலைட்டுகள் தங்களது ஆயுதங்களை போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்து சரண் அடைந்தனர்.

இதை அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிசேக் பல்லவா தெரிவித்தார். மாவோயிஸ்ட் கொள்கையில் அதிருப்தி ஏற்பட்டதாலும், தங்கள் சொந்தப்பகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டதாலும் சரண் அடைந்ததாக அந்த நக்சலைட்டுகள் கூறினர். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. அவர்களது குடும்பத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என மாநில அரசு கூறி உள்ளது.

Next Story