பாகிஸ்தானில் ராகுலும், பிரியங்காவும் முன்மாதிரியாக கருதப்படுகின்றனர் - உத்தரபிரதேச மந்திரி கருத்து


பாகிஸ்தானில் ராகுலும், பிரியங்காவும் முன்மாதிரியாக கருதப்படுகின்றனர் - உத்தரபிரதேச மந்திரி கருத்து
x
தினத்தந்தி 4 Nov 2019 9:30 PM GMT (Updated: 4 Nov 2019 9:03 PM GMT)

பாகிஸ்தானில் ராகுலும், பிரியங்காவும் முன்மாதிரியாக கருதப்படுவதாக உத்தரபிரதேச மந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சட்டசபை விவகாரத்துறை மந்திரியாக இருக்கும் ஆனந்த் ஸ்வருப் சுக்லா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது. பிளவுபடுத்துவதுதான், அதன் சித்தாந்தம். ராகுல் காந்தியும், பிரியங்காவும் பாகிஸ்தானில் முன்மாதிரியாக கருதப்படுகிறார்கள். அவர்களின் சுவரொட்டிகள், அந்த நாட்டின் சுவர்களை அலங்கரிக்கின்றன.

பிரியங்காவின் கணவர், ஏழைகளின் நிலத்தை அபகரித்தவர். எனவே, ஊழலைப் பற்றி பேச பிரியங்காவுக்கு உரிமை இல்லை. நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜாமீனில் இருக்கும் சோனியா, ராகுல் ஆகியோரைப் பற்றி பிரியங்கா பேசட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story