சட்டசபை தேர்தல்: ஜார்கண்ட் மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது


சட்டசபை தேர்தல்: ஜார்கண்ட் மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது
x
தினத்தந்தி 7 Nov 2019 1:10 AM IST (Updated: 7 Nov 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. 81 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல், 13 தொகுதிகளில் 30-ந்தேதி நடக்கிறது. அந்த தொகுதிகளில் நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

வேட்புமனு தாக்கலுக்கு 13-ந்தேதி கடைசிநாள் ஆகும். மனுக்களை வாபஸ் பெற 16-ந்தேதி கடைசி நாள். 30-ந்தேதி, காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறும். டிசம்பர் 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.


Next Story