’புல் புல்’ புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக ரத்து
புல் புல் புயல் நாளை அதிகாலையில் அதி தீவிர புயலாக கரையைக் கடக்க உள்ளது.
கொல்கத்தா,
வங்கக்கடலில் உருவான, 'புல் புல்' புயல், நாளை அதிகாலையில், மேற்கு வங்க மாநிலத்துக்கும், வங்கதேச நாட்டுக்கும் இடையே, அதி தீவிர புயலாக கரையை கடக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை விமானத்தின் வருகை மற்றும் புறப்பாடு இருக்காது என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story