சுப்ரீம் கோர்ட்டு கூறியபடி மசூதிக்கான நிலத்தை ஏற்கக்கூடாது - சன்னி வக்பு வாரியத்துக்கு முஸ்லிம் அமைப்பு வேண்டுகோள்


சுப்ரீம் கோர்ட்டு கூறியபடி மசூதிக்கான நிலத்தை ஏற்கக்கூடாது - சன்னி வக்பு வாரியத்துக்கு முஸ்லிம் அமைப்பு வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 Nov 2019 8:36 PM GMT (Updated: 15 Nov 2019 8:36 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு கூறியபடி மசூதிக்கான நிலத்தை ஏற்கக்கூடாது என சன்னி வக்பு வாரியத்துக்கு முஸ்லிம் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுடெல்லி,

அயோத்தி வழக்கின் மனுதாரர்களில் ஒருவரும், ஜமியத் உலமா இ ஹிந்த் அமைப்பின் தலைவருமான மவுலானா அர்ஷாத் மதானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், இந்த தீர்ப்பு புரிந்து கொள்ள முடியாதவாறு உள்ளது. மசூதிக்குள் சிலைகள் வைத்ததையும், மசூதியை இடித்ததையும் சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறுகிறது. ஆனால், அதை செய்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கூறுகிறது.

மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது எங்கள் கருத்து. இருப்பினும், அதுபற்றி அந்த வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும். இது, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல, உரிமை சம்பந்தப்பட்டது. எனவே, நிலம் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story