மத்திய பட்ஜெட்: சென்னை-பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலை திட்டம்

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.103 லட்சம் கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். சென்னை–பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலை திட்டம் தொடங்கப்படும். தனியார் பங்களிப்புடன் 150 பயணிகள் ரெயில்கள் விடப்படுகின்றன என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி கடந்த ஆண்டு சுதந்திர தின உரை ஆற்றும்போது, அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில், நான் தேசிய உள்கட்டமைப்பு பின்தொடர்தல் திட்டத்தை தொடங்கினேன். கடந்த ஆண்டு டிசம்பர் 31–ந் தேதி தொடங்கிய இதற்கு செலவு ரூ.103 லட்சம் கோடி ஆகும். இதில் 6,500 திட்டங்கள் அடங்கும்.
வீட்டுவசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மலிவுவிலை எரிசக்தி, அனைவருக்கும் சுகாதாரம், உலக தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள், நவீன ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பஸ் முனையங்கள், மெட்ரோ, ரெயில்வே போக்குவரத்து, தளவாடம், பண்டககாப்பு, நீர்ப்பாசன திட்டங்கள் அடங்கும்.
தேசிய திறன் மேம்பாட்டு முகமை, உள்கட்டமைப்பு அடிப்படையிலான திறன் மேம்பாட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்தும்.
உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக இளம் என்ஜினீயர்கள், மேலாண்மை பட்டதாரிகள், பொருளாதார வல்லுனர்கள் கொண்ட உள்கட்டமைப்பு திட்ட தயாரிப்பு மையம் உருவாக்கப்படும்.
தேசிய தளவாட கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
நெடுஞ்சாலைகளைப் பொறுத்தமட்டில் விரைவான வளர்ச்சி காணப்படும். இதில், 2,500 கி.மீ. அணுகல் கட்டுப்பாட்டு நெடுஞ்சாலைகளும், 9 ஆயிரம் கி.மீ. பொருளாதார வழித்தடங்களும், 2 ஆயிரம் கி.மீ. கடலோர மற்றும் துறைமுக சாலைகளும் அடங்கும். 2 ஆயிரம் கி.மீ. மூலோபாய நெடுஞ்சாலைகளும் (ஸ்ட்ரேடஜிக் ஹைவேஸ்) இதில் அடங்கும்.
2023-ம் ஆண்டுக்குள் டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மேலும் 2 திட்டங்களும் செய்து முடிக்கப்படும்.
சென்னை-பெங்களூரு அதிவேக நெடுஞ்சாலை திட்டம் தொடங்கப்படும்.
* புதிய ரெயில் தடங்கள் அமைப்பதற்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். மீட்டர்கேஜ் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்ற ரூ.2,350 கோடி செலவிடப்படும். இரட்டை பாதை அமைக்க ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரெயில் பெட்டிகள் தயாரிக்க ரூ.5,787 கோடி ஒதுக்கப்படும்.
* ரெயில்வேக்கு சொந்தமான நிலங்களில் ரெயில் தடங்களையொட்டி பெரிய அளவில் சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும்.
* பொதுத்துறை, தனியார் பங்களிப்புடன் 150 பயணிகள் ரெயில்கள் இயக்கப்படும்.
* சுற்றுலா தலங்களை இணைக்கிற வகையில் மேலும் பல தேஜஸ் ரெயில்கள் விடப்படும்.
* ரூ.18 ஆயிரத்து 600 கோடியில், பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் (148 கி.மீ. தொலைவிலானது) செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் மெட்ரோ ரெயில் கட்டணம் வசூலிக்கப்படும்.
* போக்குவரத்து துறை உள்கட்டமைப்புக்காக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி 2020-2021 நிதி ஆண்டில் செலவிடப்படும்.
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கொண்டு வரப்படும். மரபுரீதியிலான மின்மீட்டர்களுக்கு பதிலாக ‘பிரிபெய்டு ஸ்மார்ட்’ மீட்டர்களை 3 ஆண்டுகளில் பொருத்த மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு வழங்கப்படும்.
* ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் ஏப்ரல் 1-ந் தேதி முதல் எளிமையாக்கப்படும்.
* 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் மத்திய அரசின் துறைகளில் 2.62 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.

Related Tags :
Next Story