ஈரானில் இருந்து 2-ம் கட்டமாக 44 இந்தியர்கள் மும்பை வந்தனர்


ஈரானில் இருந்து 2-ம் கட்டமாக 44 இந்தியர்கள் மும்பை வந்தனர்
x
தினத்தந்தி 13 March 2020 9:07 PM GMT (Updated: 13 March 2020 9:07 PM GMT)

ஈரானில் இருந்து 2-ம் கட்டமாக 44 இந்தியர்கள் மும்பை வந்து இறங்கினர்.

மும்பை,

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதல் கடுமையாக உள்ளது. எனவே ஈரானுக்கு ஆன்மிக பயணமாக சென்ற இந்தியர்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க் கிழமை முதல்கட்டமாக 58 இந்தியர்கள் அழைத்துவரப்பட்டனர்.

2-வது கட்டமாக நேற்று பகல் 12.08 மணிக்கு 44 இந்தியர்கள் ஈரான் விமானம் மூலம் மும்பை வந்து இறங்கினர். அங்கிருந்து அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் உள்ள ராணுவ முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இதற்காக இந்திய அதிகாரிகள் குழுவினருக்கும், ஈரான் அதிகாரிகளுக்கும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார். எஞ்சியவர்களும் தொடர்ந்து அழைத்துவரப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story