மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு


மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு
x
தினத்தந்தி 16 March 2020 1:38 PM IST (Updated: 16 March 2020 1:38 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கடந்த வாரம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்பதவி விலகினர். இதனால் அக்கட்சியின் பலம் 114-ல் இருந்து 92 ஆககுறைந்தது. 

இதையடுத்து, முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக சார்பில் ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கமல்நாத்திற்கு கவர்னர் உத்தரவிட்டார். 

ஆனால், காங்கிரஸ் எம்ல்ஏக்களை பாஜக கடத்தி வைத்திருக்கும் நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாத சூழல் உள்ளது என கவர்னருக்கு முதல்வர் கமல்நாத் கடிதம் எழுதியிருந்தார். 

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்,  இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே மத்திய பிரதேச சட்ட சபை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
1 More update

Next Story