டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,542 ஆக உயர்வு


டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,542 ஆக உயர்வு
x
தினத்தந்தி 9 May 2020 11:10 PM IST (Updated: 9 May 2020 11:10 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 6,542 ஆக உயர்ந்துள்ளது.

துடெல்லி, 

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 59,662 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,847 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,981 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது. 

இந்நிலையில் டெல்லியில் புதிதாக 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கு 6,542 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை அங்கு 2,020 பேர் குணமடைந்துள்ளனர்.


Next Story