சத்தீஸ்கார் முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகி மருத்துவமனையில் அனுமதி
சத்தீஸ்கார் முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராய்ப்பூர்,
சத்தீஸ்கார் மாநிலத்தின் முதல்-மந்திரியாக 2000-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு நவம்பர் வரை பதவி வகித்தவர் அஜித் ஜோகி (வயது 74). ஜனதா காங்கிரஸ் சட்டீஸ்கர் கட்சியை தொடங்கிய இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை திடீரென அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பிரச்சனை உள்ளதால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story