இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி


இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
x
தினத்தந்தி 25 May 2020 12:49 AM IST (Updated: 25 May 2020 12:49 AM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது எழுந்த ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பான வழக்கில் இங்கிலாந்தை சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெல் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தி வரப்பட்டு திகார் சிறையில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அமலாக்கத்துறை திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்டியன் மிசெலிடம் இந்த வழக்கு தொடர்பாக நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை நேற்று காணொலி மூலம் விசாரித்த சிறப்பு நீதிபதி புலஸ்தியா பிரமாசலா, கிறிஸ்டின் மிசெலிடம் அமலாக்கத்துறை 2 நாள் திகார் சிறைக்கு சென்று விசாரணை நடத்தலாம் என்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Next Story