உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்


உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 25 May 2020 7:37 PM IST (Updated: 25 May 2020 7:37 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநில தொழிலாளர்களை பிற மாநிலங்களில் வேலைக்கு எடுக்கும் போது உத்தரப் பிரதேச மாநில அரசிடமிருந்து முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியதாவது:-

உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் மாநிலத்திற்குள் வேலை வாய்ப்பை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான உத்தரவை நான் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளேன்.  மற்ற மாநிலங்களுக்கு உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் தேவைப்பட்டால் அவர்கள் எங்களிடம் அனுமதி பெற வேண்டும். ஏனென்றால் எங்களது மாநில மக்கள் மிக மோசமாக நடத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை” என்றார்.

1 More update

Next Story