ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரில் ரஜோரி பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ரஜோரி,
ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் உள்ள காலகோட் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று இரவு நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
முன்னதாக காலகோட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தினான். இதனைத்தொடர்ந்து நடந்த என்கவுண்டரில் அந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாதுகாப்பு படையினர் தொடர்ந்து அந்தப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்தப்பகுதி பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது, அவர்கள் அதை சுற்றி வளைத்துள்ளதாக ரஜோரி-பூஞ்ச் ரேஞ்ச் டி.ஜ.ஜி விவேக் குப்தா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story