டெல்லி மக்களுக்கே டெல்லி ஆஸ்பத்திரிகள்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்புக்கு மாயாவதி எதிர்ப்பு
டெல்லி மக்களுக்கே டெல்லி ஆஸ்பத்திரிகள் என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்புக்கு மாயாவதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
லக்னோ,
கொரோனா காலகட்டத்தில், டெல்லி அரசின் ஆஸ்பத்திரிகளிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெல்லி மக்களுக்கே சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
நாட்டின் தலைநகரான டெல்லிக்கு பல மாநில மக்களும் பணிக்காக வருகின்றனர். அங்கு யாருக்காவது உடல்நிலை மோசமாகி, அவர் வெளிமாநிலத்தவர் என்பதற்காக டெல்லியில் சிகிச்சை மறுக்கப்பட்டால், அது துரதிருஷ்டவசமானது. இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story