ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 11 Jun 2020 2:15 AM IST (Updated: 11 Jun 2020 1:56 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

புதுடெல்லி, 

தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து தி.மு.க. அமைப்பு செயலாளரும், மேல்சபை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கடந்த மே மாதம் 23-ந்தேதி தமிழக குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சென்னை ஐகோர்ட்டு அன்றே அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு காணொலி அமர்வு மூலம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

Next Story