ஊரடங்கினால் கொரோனாவால் ஏற்படவிருந்த உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
ஊரடங்கினால் கொரோனாவால் ஏற்படவிருந்த உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.4 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 9,900க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 1.8 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இன்று 21 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், கவர்னர்கள் உள்ளிட்டோருடன் காணொலி காட்சி மூலம் அலோசனைக் கூட்டம் நடத்தினர்.
முன்னதாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சீன ராணுவத்தின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 3 இந்திய ராணுவ வீரர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார். அவர்களது வீரமும், தியாகமும் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும் என்றும் அவர்களை இழந்து நிற்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடி பேசியதாவது;-
“கொரோனா காரணமாக ஏற்படும் மரணங்கள் கவலை அளிக்கிறது. கொரோனாவால் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பும் மிகுந்த சோகத்தை அளிக்கக்கூடியது.
இருப்பினும் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் குறைவாகவே இருக்கிறது.
இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனாவால் ஏற்படவிருந்த உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முன் கூட்டியே ஊரடங்கு கொண்டு வந்ததற்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் முயற்சியால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பி உள்ளனர். ஊரடங்கு தளர்வால் பொருளாதாரத்தை மெல்ல மெல்ல மீட்டு எடுத்து வருகிறோம். இந்த சமயத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி மற்ற மாநிலங்களுக்கு உதவும்.
தனியார் துறை ஊழியர்கள் அதிகம் பணிக்கு திரும்பி வருகின்றனர். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தற்போது அதிகரித்துள்ளது. சிறு குறு தொழில், தோட்டக்கலைத் துறை பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது உள்ள சூழலில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பொது இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். பொது மக்கள் முக கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story