எல்லை விவகாரம் குறித்து இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் இன்று பேச்சுவார்த்தை
லடாக்கில் கல்வான் பகுதியில் நடந்த மோதல் தொடர்பாக சீனா மற்றும் இந்தியா இடையில் ராணுவ கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
புதுடெல்லி,
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சில தினங்களுக்கு முன்பு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த வன்முறை சம்பவத்துக்கு சீன ராணுவம் நேரடியாகவே பொறுப்பேற்க வேண்டும் எனவும் சீனா மீண்டும் இது போன்ற அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டால், இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என இந்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.
இந்தியாவின் நில எல்லைப் பகுதிகளிலும், வான்வெளி மற்றும் கடற்பகுதிகளிலும் சீனாவின் ஊடுருவல் ஏதும் இருக்கிறதா என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்துவதற்கு இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் இருதரப்பிலும் ராணுவ குவிப்பு நடந்து வந்தாலும், பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண பேச்சுவார்த்தையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ராணுவ கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. மோல்டோவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கல்வான் மோதலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

Related Tags :
Next Story