தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சமாக உயர்வு: பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்தது + "||" + Corona infection in India rises to 15 lakh: Death toll exceeds 34 thousand

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சமாக உயர்வு: பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சமாக உயர்வு: பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், இந்த வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது.
புதுடெல்லி, 

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை தொடர்ந்து, 3-வது இடத்தில் இந்தியா உள்ளது.

இந்தியாவில் அதிகம் பாதிப்பு உள்ள மாநிலமாக மராட்டியம் இருக்கிறது. அங்கு கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகம், டெல்லி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் பாதிப்பு 2 லட்சத்து 34 ஆயிரத்தை தாண்டிவிட்ட நிலையில், மற்ற 3 மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 74 ஆயிரத்தையும், மேற்குவங்காளத்தில் 64 ஆயிரத்தையும், குஜராத்தில் 58 ஆயிரத்தையும் நெருங்கிவிட்டது.

தெலுங்கானாவில் 57 ஆயிரத்து 142, பீகாரில் 43 ஆயிரத்து 843, ராஜஸ்தானில் 38 ஆயிரத்து 514, அசாமில் 34 ஆயிரத்து 947, அரியானாவில் 32 ஆயிரத்து 876, மத்தியபிரதேசத்தில் 29 ஆயிரத்து 217, ஒடிசாவில் 28 ஆயிரத்து 107, கேரளாவில் 20 ஆயிரத்து 894, ஜம்மு காஷ்மீரில் 18 ஆயிரத்து 879, பஞ்சாபில் 14 ஆயிரத்து 378, ஜார்கண்டில் 9 ஆயிரத்து 78, சத்தீஸ்காரில் 8 ஆயிரத்து 257, உத்தரகாண்டில் 6 ஆயிரத்து 587, கோவாவில் 5 ஆயிரத்து 287, திரிபுராவில் 4 ஆயிரத்து 269, புதுச்சேரியில் 3 ஆயிரத்து 11, இமாசலபிரதேசத்தில் 2 ஆயிரத்து 330, மணிப்பூரில் 2 ஆயிரத்து 317, நாகாலாந்தில் 1,460, அருணாசலபிரதேசத்தில் 1,330, லடாக்கில் 1,327, தாதர்நகர் ஹவேலியில் 982, சண்டிகாரில் 934, மேகாலயாவில் 779, சிக்கிமில் 579, மிசோரத்தில் 384, அந்தமான் நிகோபார் தீவில் 363 பேர் என நாடு முழுவதும் மொத்தம் 15 லட்சத்து 31 ஆயிரத்து 669 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 48 ஆயிரத்து 513 ஆகும்.

24 மணி நேரத்துக்குள் ஏற்படும் கொரோனா பாதிப்பில் எப்போதுமே மராட்டிய மாநிலமே முதல் இடத்தில் இருக்கும். ஆனால் நேற்று அந்த இடத்தை ஆந்திர மாநிலம் பிடித்தது. அங்கு புதிதாக 7,948 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மராட்டியத்தில் 7,717 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கி றது.

கொரோனா பாதிப்பை போலவே பலி எண்ணிக்கையிலும் மராட்டியமே முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு இந்த வைரசின் பிடியில் சிக்கி 14 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்துள்ளனர். 2-வது இடத்தில் உள்ள டெல்லியில் 3,881 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். 3-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3,741 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ள குஜராத்தில் 2,372 பேரும், கர்நாடகாவில் 2,055 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,497 பேரும், மேற்குவங்காளத்தில் 1,449 பேரும், ஆந்திராவில் 1,148 பேரும், மத்தியபிரதேசத்தில் 830 பேரும், ராஜஸ்தானில் 644 பேரும், தெலுங்கானாவில் 480 பேரும், அரியானாவில் 406 பேரும், பஞ்சாபில் 336 பேரும், ஜம்மு காஷ்மீரில் 333 பேரும், பீகாரில் 269 பேரும், ஒடிசாவில் 154 பேரும், ஜார்கண்டில் 89 பேரும், அசாமில் 88 பேரும், உத்தர்காண்டில் 70 பேரும், கேரளாவில் 67 பேரும், புதுச்சேரியில் 47 பேரும், சத்தீஸ்காரில் 46 பேரும், கோவாவில் 36 பேரும், திரிபுராவில் 21 பேரும், சண்டிகார் மற்றும் இமாசலபிரதேசத்தில் தலா 14 பேரும், லடாக்கில் 6 பேரும், மேகாலயா மற்றும் நாகாலாந்தில் தலா 5 பேரும், அருணாசலபிரதேசத்தில் 3 பேரும், தாதர்நகர் ஹவேலியில் 2 பேரும், அந்தமான் நிகோபார் தீவு மற்றும் சிக்கிமில் தலா ஒருவரும் என நாட்டில் மொத்தம் 34 ஆயிரத்து 193 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி பலியாகி உள்ளனர். இதில் 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 768 ஆகும்.

கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், அதில் 9 லட்சத்து 88 ஆயிரத்து 30 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது. இன்னும் 5 லட்சத்து 9 ஆயிரத்து 447 பேர் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கண்ட இந்த தகவல்களை வெளியிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாததால் முந்தைய நாள் எண்ணிக்கையையே குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்தார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்தார்
2. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியுள்ளது.
3. "தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18.55 லட்சத்தை தாண்டியது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.61 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: மத்திய அரசு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.61 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது