பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்


பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்
x
தினத்தந்தி 5 Aug 2020 6:21 AM IST (Updated: 5 Aug 2020 6:21 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

ஒட்டுமொத்த காஷ்மீர் மாநிலத்தையும், பஞ்சாப்பின் சில பகுதிகளையும் இணைத்து பாகிஸ்தான் புதிய வரைபடம் உருவாக்கி உள்ளது. இதை வெளியிட்ட பிரதமர் இம்ரான்கான், இதற்கு தனது மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருப்பதாகவும், இது பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை குறிப்பதாகவும் கூறினார்.

பாகிஸ்தானின் இந்த வரைபடத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அரசியல் வரைபடம் என்ற பெயரில் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள வரைபடத்தை நாங்கள் பார்த்தோம். இது ஒரு அரசியல் அபத்தமான நடவடிக்கை. மேலும் இந்தியாவின் குஜராத் மற்றும் எங்களின் கா ஷ்மீர்லடாக் யூனியன் பிரதேங்களை உரிமை கோருவதை ஏற்க முடியாது. இந்த அபத்தமான கூற்றுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலோ, சர்வதேச நம்பகத்தன்மையிலோ இல்லை’ என்று குறிப்பிட்டு உள்ளது.

1 More update

Next Story