மராட்டியத்தை புரட்டி எடுக்கு கொரோனா: இன்று மேலும் 11,514 பேருக்கு தொற்று உறுதி


மராட்டியத்தை புரட்டி எடுக்கு கொரோனா: இன்று மேலும் 11,514 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 6 Aug 2020 5:22 PM GMT (Updated: 6 Aug 2020 5:22 PM GMT)

மராட்டியத்தில் இன்று மேலும் 11,514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டி போட்டு உள்ளது. தலைநகர் மும்பையில் முன்பை விட நோய் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. 


இந்த நிலையில் மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 11,514 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,79,779 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் மேலும் 316 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,792 ஆக உயந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 10,854 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,16,375 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 1,46,305 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story