மேற்கு வங்காளத்தில் இன்று ஒரே நாளில் 3,274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மேற்கு வங்காளத்தில் இன்று ஒரே நாளில் 3,274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 23 Aug 2020 10:42 PM IST (Updated: 23 Aug 2020 10:42 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் இன்று ஒரே நாளில் 3,274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலத்தின் சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று ஒன்று ஒரே நாளில் 3,274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்கு வங்காளத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,870 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,794 ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 28,069 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 1,08,007 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
1 More update

Next Story