மராட்டியத்தில் மேலும் 120 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டியத்தில் மேலும் 120 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 24 Aug 2020 9:17 AM GMT (Updated: 24 Aug 2020 9:17 AM GMT)

மராட்டியத்தில் மேலும் 120 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு  மராட்டியத்தில் தான் அதிக அளவு காணப்படுகிறது.  கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மராட்டியத்தில் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில், மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 120 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,716 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த ஆட்கொல்லி நோய்க்கு இன்று மேலும் ஒரு காவலர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 11,049 காவலர்கள் கொரோனா நோய்தொற்றிலிருந்து குண்மடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 2,528 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story