காஷ்மீரில் பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம்: தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை


காஷ்மீரில் பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம்: தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Sept 2020 7:12 AM IST (Updated: 20 Sept 2020 7:12 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பயங்கரவாதியின் சொத்துகள் முடக்கம் செய்து தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஸ்ரீநகர், 

தெற்கு காஷ்மீரில் கடந்த 2017-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எப்.) முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இர்சத் அகமது ரேசி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பயங்கரவாதியின் தந்தைக்கு சொந்தமாக புலவாமா மாவட்டம் கல்கபோராவில் உள்ள ரத்னிபோரா பகுதியில் ஒரு வீடு உள்ளது.

இந்த வீட்டை பயங்கரவாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து இந்த வீடு உள்ளிட்ட சொத்துகளை தேசிய புலனாய்வு முகமை நேற்று அதிரடியாக முடக்கியுள்ளது.

Next Story