இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 26 Sep 2020 4:25 AM GMT (Updated: 2020-09-26T09:55:08+05:30)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பில் அமெரிக்காவை தொடர்ந்து 2-ம் இடத்தில் நீடிக்கும் இந்தியா, புதிய பாதிப்புகள் மற்றும் குணமடைவோர் எண்ணிக்கையில் தினமும் கணிசமான அளவை பெற்று வருகிறது. இதைப்போல ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கையையும் தினமும் பதிவாகி வருகிறது.

அந்த வகையில் இந்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,03,933 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,089 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93,379 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 48,49,585 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்தியா முழுவதும் 9,60,969 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 13,41,535 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 7,02,69,975 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story