கர்நாடக காங்.தலைவருக்கு சொந்த இடமான இடங்களில் சிபிஐ சோதனை- சித்தராமையா கடும் கண்டனம்
கர்நாடக காங்.தலைவர் டிகே சிவக்குமாருக்கு சொந்த இடமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது. டிகே சிவகுமார் மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமான 15- இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
டிகே சிவக்குமார் இல்லத்தில் நடத்தப்படும் சிபிஐ சோதனை தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, “ மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பாஜக எப்போதுமே பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது.
இடைத்தேர்தலை சீர்குலைக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் இல்லத்தில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. சிபிஐயின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story