இந்தியா பல வழிகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்: மத்திய சுகாதார துறை மந்திரி தகவல்


இந்தியா பல வழிகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்: மத்திய சுகாதார துறை மந்திரி தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2020 2:45 AM IST (Updated: 14 Oct 2020 1:47 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள்ளாக, இந்தியா பல வழிகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் என்று மத்திய சுகாதார துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்க உலகில் பல்வேறு நாடுகள் போட்டிபோட்டு வருகின்றன. சில தடுப்பு மருந்துகள் உச்ச கட்ட பரிசோதனையை எட்டி உள்ளது. இருந்தாலும் இன்னும் வெற்றிகரமான ஒரு தடுப்பூசி உருவாகவில்லை.

இந்த நிலையில் மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ஷ வர்தன், “இந்தியா அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் கொரோனா தடுப்பு மருந்துகளை உருவாக்கிவிடும். நாங்கள் திட்டமிட்ட தடுப்பூசி வினியோகத்திற்காக தயாராகி வருகிறோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உயர்நிலை மந்திரிகள் குழுவின் காணொலி கருத்தரங்கில் கலந்து கொண்டபோது அவர் இந்த தகவலை பகிர்ந்தார்.

“2021-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் கொரோனா தடுப்புமருந்து கிடைக்கும். 40 முதல் 50 கோடி டோஸ் அளவில் அந்த மருந்தை பெறவும், 20 முதல் 25 கோடி மக்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் தடுப்பூசி போடவும் தயாராகி வருகிறோம்” என்றும் கூறினார்.


Next Story