நீலகிரியில் யானைகளின் வழித்தடத்தில் விடுதி, உணவகங்கள் கட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் - உச்சநீதிமன்றம்


நீலகிரியில் யானைகளின் வழித்தடத்தில் விடுதி, உணவகங்கள் கட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் - உச்சநீதிமன்றம்
x
தினத்தந்தி 14 Oct 2020 8:07 AM GMT (Updated: 14 Oct 2020 8:07 AM GMT)

நீலகிரியில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி, உணவகங்கள் கட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி,

நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி, உணவகங்கள் கட்டியது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2011ஆம் ஆண்டு தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், நீலகிரியில் யானைகளின் வழித்தடத்தில் விடுதி, உணவகங்கள் கட்ட தடை விதித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உறுதி செய்தனர். அதன்படி நீலகிரியில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி, உணவகங்கள் கட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரியில் யானைகளின் வழித்தடங்களில் சட்ட விரோத கட்டுமானங்களை ஆய்வு செய்ய, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

Next Story