ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி விசாரித்தது. இது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும் மறுத்துவிட்டது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வக்கீல் யோகேஷ் கண்ணா நேற்று பதில் மனுவை தாக்கல் செய்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என முடிவெடுத்தது அரசின் கொள்கை முடிவாகும். ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு கடும் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என்பது உறுதிசெய்யப்பட்டது.
எனவே அதை கருத்தில் கொண்டே சென்னை ஐகோர்ட்டு, ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என உறுதிபடுத்தியுள்ளது. அதே போல ஸ்டெர்லைட் நிர்வாகம், ஆலை தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு ஒரு சாரரின் வாதத்தை கேட்டு ஒருதலைபட்சமாக முடிவெடுத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. இது ஒரு கிரிமினல் அவமதிப்பாகும். இதற்காகவே ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story