மராட்டியத்தில் கணிசமாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் கணிசமாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 19 Oct 2020 5:02 PM GMT (Updated: 19 Oct 2020 5:02 PM GMT)

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.  நேற்று மாநிலத்தில் புதிதாக 9 ஆயிரத்து 60 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.   

இந்த நிலையில், இன்று  5,984- பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் தொற்றில் இருந்து 15 ஆயிரத்து 069-பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 125- பேர் உயிரிழந்துள்ளனர். 

மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 84 ஆயிரமாக உள்ளது.  தொற்று பாதிப்புடன் 1 லட்சத்து 73 ஆயிரத்து 759-பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  வைரஸ் தொற்று பாதிப்பால் 42 ஆயிரத்து 240-பேர் உயிரிழந்துள்ளனர். 

மும்பை மாநகராட்சி பகுதியில் புதிதாக 1,233 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நகரில் பாதிக்கப்பட்டர்வர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 43ஆயிரத்து 172  ஆக உள்ளது. நகரில் மேலும் 45 பேர் பலியாகி உள்ளனர். 


Next Story