தேசிய செய்திகள்

ஆந்திராவில் இன்று 3,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed for 3,620 people in Andhra Pradesh today

ஆந்திராவில் இன்று 3,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆந்திராவில் இன்று 3,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திராவில் இன்று 3,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று புதிதாக 3,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,96,919 ஆக அதிகரித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் 16 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 6,524 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆந்திராவில் 32,257 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை ஆந்திராவில் 10 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி ஆஸ்பத்திரியில் 19 வயது ஊழியருக்கு கொரோனா தடுப்பூசி
டெல்லி ஆஸ்பத்திரியில் 19 வயது ஊழியருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
2. பஞ்சாபில் வரும் 21 ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என அறிவிப்பு
பஞ்சாபில் வரும் 21 ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.81 கோடியாக உயர்ந்துள்ளது.
4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.77 கோடியாக உயர்ந்துள்ளது.
5. ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி; ஜோ பைடன் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் தனது நிர்வாகத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஜோ பைடன் அறிவித்தார்.