15-வது நிதிக்குழு பரிந்துரை அடிப்படையில் தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதியை ஒதுக்கியது மத்திய அரசு
15-வது நிதிக்குழு பரிந்துரை அடிப்படையில் தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
புதுடெல்லி,
நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் 13 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு 15-வது நிதிக்குழு பரிந்துரை செய்தது.
இந்நிலையில் 15-வது நிதிக்குழு பரிந்துரை அடிப்படையில் தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அதில் அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடியும், இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.952.58 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2016ல் என்.கே.சிங் தலைமையிலான 15வது நிதிக் குழுவை மத்திய அரசு அமைத்தது. மத்திய மாநில அரசுகளின் நிதிநிலையை ஆராய்ந்து வளர்ச்சிக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை இக்குழு பரிந்துரைத்து வருகிறது. நேற்று இக்குழுவின் தலைவர் என்.கே.சிங் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து 2021 - 26 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையை வழங்கினார். அதில் மாநிலங்களின் நிதியாதாரங்களை ஆராய்ந்து ஒவ்வொரு மாநிலமும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஏற்ற தீர்வுகள் குறித்து அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நிதிக் குழு தெரிவித்திருந்தது.
Related Tags :
Next Story