கர்நாடகாவில் புதிதாக 2,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கர்நாடகாவில் இன்று புதிதாக 2,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் இன்று மேலும் 2,116 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,55,912 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,474 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 3,368 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,14,949 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 29,470 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது தீபாவளியையொட்டி பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, தமிழகத்திற்கு கர்நாடக அரசு பஸ்கள் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 மாதங்களுக்கு பிறகு கர்நாடக அரசு பஸ்கள், தமிழகத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் பயணம் செய்ய இ-பாஸ் தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை 6 நாட்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story