விவசாயிகளுக்கான நீதியை வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்
விவசாயிகளுக்கான நீதி மற்றும் உரிமையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், அரியானாவை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விவசாயிகளுக்கான நீதி மற்றும் உரிமையை மத்திய அரசு வழங்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக நேற்று ராகுல்காந்தி தனது டுவிட்டரில், “சாலைகளிலும், வயல்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கடின உழைப்புக்கு நாம் அனைவரும் கடன்பட்டு இருக்கிறோம். அந்த விவசாயிகளுக்கான நீதி மற்றும் உரிமையை வழங்குவதன் மூலமே இந்த கடனை ஈடுகட்ட முடியுமே தவிர, அவர்களுக்கு எதிராக தடியடி நடத்தியோ அல்லது கண்ணீர்புகை குண்டுகளை வீசியோ தவறான நடந்து கொள்வதன் மூலம் அல்ல. ஆணவத்தின் நாற்காலியில் இருந்து இறங்கி, விவசாயிகளுக்கான உரிமையை வழங்குவது குறித்து சிந்தியுங்கள்” என்று அவர் இந்தியில் பதிவிட்டிருந்தார்.
Related Tags :
Next Story