அசாம் மாநிலத்தில் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
அசாம் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
திஸ்புர்,
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக அசாம் மாநிலம் சென்றுள்ளார். நேற்று நள்ளிரவில் கவுகாத்தி விமான நிலையம் சென்றடைந்த அவரை, அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவல் நேரில் சென்று வரவேற்றார். மேள தாளங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமித்ஷா தனது இரண்டு நாள் பயணத்தின்போது கவுகாத்தி, சுராச்சந்த்பூர் நகரங்கள் உள்ளிட்ட அசாம், மணிப்பூர் மாநிலங்களில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட உள்ள புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story