கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்


கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்
x
தினத்தந்தி 5 April 2021 5:28 AM IST (Updated: 5 April 2021 5:28 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதால், மேல்நிலைப் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்பட்டுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பள்ளிகளை சில நாட்கள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி 9-ம் வகுப்புக்கான பாடவகுப்புகள் 2 வாரங்களும், 10, 11, 12-ம் வகுப்புக்கான பாட வகுப்புகள் ஒரு வாரத்துக்கும் மூடப்படும் என்று கவர்னர் மனோஜ் சின்கா, நேற்று உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு இன்று (திங்கள்) முதல் அமலுக்கு வருகிறது.

காஷ்மீரில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், பள்ளிகள் ஏப்ரல் 21-ந் தேதி வரை மூடப்படுகிறது என்று கவர்னர் சின்கா கூறி உள்ளார். ‘200 பேர்களுக்கு அதிகமாக கூடும் சமூக நிகழ்வுகள், கூட்டங்களுக்கு அனுமதியில்லை’ என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story