கொரோனா பரவல் காரணமாக 30-ந் தேதி வரை கடற்கரைகள் மூடல்; மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
கொரோனா தொற்று பரவல் காரணமாக மும்பை கடற்கரைகளை வருகிற 30-ந் தேதி வரை மூட மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
கமிஷனர் உத்தரவு
மராட்டியத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாநில அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரங்கு, பகல் நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில் நேற்று மும்பை மாகராட்சி கமிஷனர் இக்பால் சகால் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி மும்பையில் உள்ள அனைத்து கடற்கரைகளையும் வருகிற 30-ந் தேதி வரை மூட அவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை மாநகராட்சி உதவி கமிஷனர்கள் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவில் கூறியிருந்தார்.
மூடப்பட்டனஅதன்படி மும்பையில் அனைத்து கடற்கரைகளும் நேற்று மூடப்பட்டன. போலீசார் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரைகள் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடற்ரைக்கு வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
Related Tags :
Next Story