தேசிய செய்திகள்

கொரோனா எதிர்ப்பு போராட்டத்தை காங்கிரஸ் பலவீனப்படுத்துகிறது; பா.ஜ.க. குற்றச்சாட்டு + "||" + Congress weakens anti-Corona struggle; BJP Indictment

கொரோனா எதிர்ப்பு போராட்டத்தை காங்கிரஸ் பலவீனப்படுத்துகிறது; பா.ஜ.க. குற்றச்சாட்டு

கொரோனா எதிர்ப்பு போராட்டத்தை காங்கிரஸ் பலவீனப்படுத்துகிறது; பா.ஜ.க. குற்றச்சாட்டு
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்துகிறது என்று பா.ஜ.க. குற்றம்சாட்டி உள்ளது.
கமல்நாத் மீது சாடல்
கொரோனாவுக்கு எதிரான போர் தொடர்பாக காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் பரஸ்பரம் ஒன்றின் மீது மற்றொன்று குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் டெல்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா காணொலிக்காட்சி வழியாக நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத், இந்தியா பெரியது அல்ல, ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இழிவான நாடாகி இருக்கிறது என்று கூறி உள்ளார். இந்த கருத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? இந்தியாவை அவமதிப்பது அந்த கட்சி தலைவர்களின் முன்னுரிமையாகி விட்டது. ஏற்கனவே கமல்நாத் உருமாறிய கொரோனாவை இந்தியா கொரோனா என குறிப்பிட்டுள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தூண்டுதலால்தான் இப்படிப் பேசி வருகிறார்.

பலவீனப்படுத்தும் கருத்துக்கள்
கமல்நாத் சொல்வது காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம். அதுதான் சோனியாவின் சித்தாந்தமும் கூட. இந்தியாவின் மீது அவதூறு கூறுவதுதான் இவர்களின் முன்னுரிமை ஆகி உள்ளது. இப்படி வெறுக்கத்தக்க கருத்தைக்கூறியும் சோனியா காந்தி ஏன் அமைதியாக இருக்கிறார்? கமல்நாத்தின் கருத்து சோனியா காந்திக்கு ஏற்புடையதுதானா?கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, சசிதரூர் போன்றோர் கருத்துக்களை வெளியிடுகிறார்கள். பாகிஸ்தான் ஊடக அறிக்கையில் இந்திய கொரோனா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் அந்த வார்த்தை காங்கிரஸ் கட்சியின் தலைமையிடத்தில் உருவானதுதான்.பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவின் மீது குறி வைக்க பயன்படுத்துவதற்கான 
கருவிகளை எதிர்க்கட்சி வழங்கி வருகிறது.பிரதமர் மோடி சமீபத்தில் கொரோனாவுக்கு எதிராக போரில் சுகாதார பணியாளர்கள் பங்கு பற்றி பேசுகையில் உணர்ச்சி வசப்பட்டார். இதை நாடகம் என்று சொல்வதா?

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கண்ணீருடன் பதவியை ராஜினாமா செய்தது பற்றி மக்களுக்கு சொல்வீர்களா? எடியூரப்பாவுக்கு கர்நாடக காங்கிரஸ் கேள்வி
கண்ணீருடன் பதவியை ராஜினாமா செய்தது குறித்து மக்களுக்கு சொல்வீர்களா? என்று எடியூரப்பாவுக்கு கர்நாடக காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
2. பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்: விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு- மம்தா பானர்ஜி
பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம் குறித்து விசாரணை நடத்த மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழுவை அமைத்துள்ளார்.
3. பெகாசஸ் உளவு விவகாரம்: அனைத்து மாநிலங்களிலும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்-காங்கிரஸ் அறிவிப்பு
செல்போன்களில் உளவு மென்பொருளை ஊடுருவி உளவு பார்த்து விட்டார்களா? அல்லது உளவு பார்க்க முயற்சி நடந்ததா? என்று தெரியவில்லை. அதை உறுதிப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
4. பஞ்சாப் காங்கிரஸ் நெருக்கடி: அமரீந்தர் சிங்கை சமரசம் செய்ய மேலிட தலைவர் பேச்சு
பஞ்சாப் காங்கிரஸ் நெருக்கடி: கட்சி பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் அமரீந்தர் சிங்கை சந்தித்து பேசினார்
5. பஞ்சாப் அரசியலில் பிளவு ஏற்படுத்த நினைக்கும் காங்கிரஸ் தலைமை - அமரீந்தர் சிங் கோபம்
பஞ்சாப் அரசியலில் காங்கிரஸ் தலைமை வலுக்கட்டாயமாக தலையீட்டு செய்து வருவதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸை தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.