தேசிய செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ கொள்கை வகுக்க வேண்டும்: மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவு + "||" + Maharashtra CM Uddhav Thackeray orders policy to help orphans

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ கொள்கை வகுக்க வேண்டும்: மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவு

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ கொள்கை வகுக்க வேண்டும்: மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவு
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ கொள்கை வகுக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெற்றோரை இழந்த குழந்தைகள்
பல உயிர்களை பலி வாங்கிய கொரோனா தொற்று பல குழந்தைகளின் பெற்றோரை காவு வாங்கி உள்ளது. மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 290 குழந்தைகள் தாய், தந்தை இருவரையுமோ அல்லது இருவரில் ஒருவரையோ இழந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களை பாதுகாக்க கொள்கை வகுக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிவாரணம்
கொரோனா பெருந்தொற்று காரணமாக தங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலன் கருதி அவர்களின் தேவைகளை கவனிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை கொள்கை வகுக்க வேண்டும். இத்தகைய குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு விவாதிக்கும். கொரோனா வைரசில் இருந்து மாநிலத்தில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பதற்கான அமைக்கப்பட்ட குழுவும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,224 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 33 பேர் பலி
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
3. அமீரகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்தது
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
4. கொரோனா தடுப்பூசி விரைவில் போட்டுக்கொள்ளுங்கள்: ராகுல்காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
5. ஆன்லைனில் பயிற்சி ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு வசதி; உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்
ஆன்லைனில் ஓட்டுனர் பயிற்சி உரிமம், வாகன பதிவு செய்யும் திட்டத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்.