மராட்டியத்தில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தது


மராட்டியத்தில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்தது
x
தினத்தந்தி 30 May 2021 3:02 PM GMT (Updated: 30 May 2021 3:02 PM GMT)

மராட்டியத்தில் தொடர்ந்து 11-வது நாளாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30-ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.

மும்பை,

கொரோனா வைரசின் 2-வது அலை பாதிப்பில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மராட்டியம், கொரோனாவின் கோரப்படியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக  கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை இறங்கு முகம் கண்டு வருவது அம்மாநில மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. 

மராட்டிய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின் படி, மராட்டியத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  18,600- ஆக குறைந்துள்ளது.  கடந்த 2 மாதங்களில்  பதிவான  குறைந்த பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். கடந்த மார்ச் 16 ஆம் தேதி மராட்டியத்தில் 17,864- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் 20 ஆயிரத்திற்கு கீழ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 

எனினும், கவலை அளிக்கும் விதமாக தொற்று பாதிப்பால் மேலும் 402- பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 94 ஆயிரத்து 844- ஆக குறைந்துள்ளது. 

Next Story