புனேவில் வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு வசதியாக கொரோனா தடுப்பூசி இயக்கம்


புனேவில் வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு வசதியாக கொரோனா தடுப்பூசி இயக்கம்
x
தினத்தந்தி 30 May 2021 7:39 PM GMT (Updated: 30 May 2021 7:39 PM GMT)

படிப்பிற்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் நலனுக்காக சிறப்பு தடுப்பூசி இயக்கம் புனேயில் தொடங்கப்பட உள்ளது.

புனே, 

மராட்டியத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தடுப்பூசி இயக்கம் தொடங்கி 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் படிப்பிற்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு வசதியாக சிறப்பு தடுப்பூசி இயக்கம் தொடங்க வேண்டும் என மராட்டிய மாநில மந்திரி ஆதித்ய தாக்கரே டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

இதன்படி மாணவர்களின் நலனுக்காக சிறப்பு தடுப்பூசி இயக்கம் புனேயில் தொடங்க முன்வந்து உள்ளது. இதுபற்றி புனே மாநகராட்சி மேயர் முரளிதர் மோகல் தெரிவிக்கையில், தடுப்பூசி இயக்கம் வருகிற 31-ந் தேதி, ஜூன் 1, மற்றும் 2-ந்தேதி நடைபெற இருப்பதாகவும், வெளிநாடு செல்லும் 18 முதல் 44 வயதுயுடைய மாணவர்கள் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

Next Story