மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,066 பேருக்கு கொரோனா


மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,066 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 May 2021 7:48 PM GMT (Updated: 2021-05-31T01:18:57+05:30)

மும்பையில் தற்போது 27,322 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய தலைநகர் மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மாநிலத்திலேயே அதிக அளவில் பதிவாகி வந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு பதிவான கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 1,066 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மும்பையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,05,575 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,855 ஆக உயர்ந்துள்ளது. 

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,327 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,61,226 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மும்பையில் தற்போது 27,322 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story