தேசிய செய்திகள்

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 20 லட்சம் மாதிரிகள் பரிசோதனை + "||" + 20 lakh samples were tested in India in a single day yesterday

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 20 லட்சம் மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 20 லட்சம் மாதிரிகள் பரிசோதனை
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 20,19,773 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா பரவலின் 2வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.

இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,32,788 பேருக்கு கொரோனா தொர்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினம் 2,31,456 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

மேலும் கொரோனா பரிசோதனைகளையும் அதிக அளவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 20,19,773 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் மொத்தம் 35,00,57,330 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் நேற்று புதிதாக 497 பேருக்கு கொரோனா பாதிப்பு
மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
2. நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படவில்லை - ஐதராபாத் பயிற்சியாளர் கருத்து
ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என அணியின் பயிற்சியாளர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.
3. ஆந்திராவில் புதிதாக 1,171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 13,749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. அசாமில் நேற்று 371 பேருக்கு கொரோனா; 555 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 3,339 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. கர்நாடகத்தில் இன்று 852 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடகாவில் தற்போது 13,590 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.