கடந்த 4 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்


கடந்த 4 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
x
தினத்தந்தி 2 Jun 2021 11:51 PM GMT (Updated: 2 Jun 2021 11:51 PM GMT)

4 மாதங்களுக்கு பிறகு முதன் முறையாக காஷ்மீரில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.

ஜம்மு, 

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்துவதும், அதற்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுப்பதும் நடந்துவந்தன.

இந்நிலையில், எல்லை தாண்டிய தாக்குதலை நிறுத்துவது என்று இரு தரப்பும் முடிவெடுத்து கடந்த பிப்ரவரி 25-ந் தேதி அறிவித்தன. 2003-ம் ஆண்டுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவு, எல்லையோர பதற்றத்தைத் தணிப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்பட்டது. அதன்பிறகு, கடந்த சில மாதங்களாக காஷ்மீர் எல்லையில் பெருமளவில் அமைதி நிலவியது.

இந்நிலையில், ஜம்மு ஆர்னியா பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் படையினர் நேற்று அதிகாலையில் 25 சுற்றுகள் சுட்டனர். அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எல்லை பாதுகாப்பு படையினரும் பதிலடியாக திருப்பிச் சுட்டனர்.

Next Story